எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 26.1.2021 இன்று 72-வது குடியரசு தினவிழா தேசிய கொடியேற்றத்துடனும் மும்மத வழிபாட்டுடனும் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் முனைவர். வி. அநுராதா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தலைமை உரையாற்றினார். பொருளியல் துறைப் பேராசிரியர் முனைவர். வெ. ராஜலெட்சுமி அவர்கள் வரவேற்புரையாற்றினார். செல்வி. பி. நிர்மலா புள்ளியல் துறைத்தலைவர் முன்னிலையுரையாற்றினார். திருமதி. ல. பென்சிலா வரலாற்றுத்துறைத் தலைவர் “இந்திய குடியரசில் வாழ்வதில் பெருமிதம் கொள்கிறேன்” என்ற தலைப்பில் உரையாற்றினார். செல்வி. தாவூத் சாராம்மா இளங்கலை மூன்றாமாண்டு, வரலாற்றுத் துறை மாணவி ” இந்திய குடியரசு தோன்றி வளர்ந்த இனிய கதை” என்ற தலைப்பில் கதையை விளக்கினார். அ.பரிதா இளங்கலை மூன்றாமாண்டு, பொருளாதார மாணவி நன்றி கூற, விழா இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள், மற்றும் மாணவியர்கள் கலந்துகொண்டு இவ்விழாவினை மிகவும் சிறப்படைய செய்தனர். வந்தே மாதரம்… ஜெய்ஹிந்த்…

More Gallery