திண்டுக்கல், எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 12.1.2021 தேதியன்று தமிழர் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழா முனைவர். வீ. அநுராதா, முதல்வர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் “ஐம்பூதங்கள் பேசினாள்..” என்ற சிறப்பு கவியரங்கம் தமிழ்த்துறைத் தலைவர், முனைவர். நாகநந்தினி தலைமையில் நடைபெற்றது. பல துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள் கலந்துகொண்டு கவி யரங்கினை சிறப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து “மாணவர் ஆசிரியர் உறவு என்றும் சிறந்திருப்பது” அக்காலத்திலா, இக்காலத்திலா என்ற தலைப்பில் சிந்தனை பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தில் பேராசிரியர்களும் மாணவர்களும் பங்கு பெற்று சிறப்பித்தனர். பட்டிமன்றத்தின் நடுவராக முனைவர். ஜா. ஸ். ஏஞ்சலின், ஆங்கிலத்துறை தலைவர் அவர்கள் பங்கேற்றார். கவியரங்கம் மற்றும் பட்டிமன்றத்தில் பங்கு பெற்றோருக்கு முதல்வர் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவின் நோக்குரையை பேராசிரியர் பி. நிர்மலா புள்ளியியல் துறைத் தலைவர் அவர்கள் வழங்கினார். விழா நிறையுரையை பொருளியல் துறைத்தலைவர் முனைவர். ஜோ. நளதம் அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சிகளை முனைவர். உமா மகேஸ்வரி, உதவி பேராசிரியர், தமிழ்த்துறை அவர்கள் தொகுத்து வழங்கினார். நன்றியுரையை முனைவர். உதவி பேராசிரியர் விலங்கியல் துறை மா. ஈத்தல் பாலின் அவர்கள் வழங்கினார். இவ்விழாவில் அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு இவ்விழாவினை மிகவும் சிறப்புரச் செய்தனர். நாட்டுபண்ணுடன் விழா இனிதே நிறைவுபெற்றது. வாழ்க தமிழ், வாழ்க தமிழ் திருநாடு. 🙏🙏🙏

More Gallery