கல்லூரி முதல்வருக்கு வரவேற்பு விழா
எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற முனைவர். திருமதி. இல. ரேவதி அம்மா அவர்களுக்கு இன்று கல்லூரி பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலக நண்பர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்களின் சார்பாக வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் தமிழ் துறை தலைவர் முனைவர். கா. நாகநந்தினி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் இதனை தொடர்ந்து விலங்கியல் துறை தலைவர் முனைவர். பா. சத்தியபாமா அவர்கள் புதிய முதல்வரை அறிமுகம் செய்து அறிமுக உரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து அனைத்து துறை தலைவர்களும் முதல்வருக்கு தங்களது வாழ்த்துக்களை துறை சார்பாகவும் ஆசிரியர்கள் சார்பாகவும் தெரிவித்து வரவேற்றனர். விழாவின் இறுதியாக விழாவின் நாயகி முனைவர் இல. ரேவதி முதல்வர் அம்மா அவர்கள் வாழ்த்துக்களை ஏற்று ஏற்புரை வழங்கினார், விழா இனிதே நிறைவு பெற்றது.