“விளையாட்டு சாதனைகள்”

21 Feb 2022

அன்னை தெரசா மகளிர் பல்கழைகழகங்களுக்கிடையே 06.12.2021 – 07.12.2021 ஆகிய தேதிகள் நடைபெற்ற பூப்பந்து போட்டியில் நமது எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் முதல் இடத்தைப் பெற்றனர். இதற்கு நமது கல்லூரி முதல்வர் தலைமை உரை ஆற்றினார், டாக்டர். அ. சீனிவாசன், குழந்தைகள் நல மருத்துவர் சிறப்புரை ஆற்றினார். டாக்டர் அ. ராஜா உடற்கல்வி இயக்குனர் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அவர்கள் இப்போட்டியினை இனிதே துவங்கி வைத்தார். உடற்பயிற்சி பொறுப்பாசிரியர் முனைவர் சு. சியாமளா தேவி மற்றும் பயிற்சியாளர் திருமதி. அ. விரோணிக்கம் மாணவிகளை ஊக்கப்படுத்தி முதல் பரிசு பெறச் செய்தனர்.

மேலும் 17.12.2021 – 18.12.2021 ஆகிய தேதிகளில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் நமது எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.

13.12.2021 – 14.12.2021 ஆகிய தேதிகளில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இறகுபந்து போட்டியில் நமது கல்லூரி மாணவிகள் மூன்றாம் இடத்தையும் மற்றும் சதுரங்கப் போட்டியில் முதல் இடத்தையும் பெற்று இக்கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.

13.12.2021 – 16.12.2021 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழகங்களுக்கிடையே சென்னை S R M பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான கையுந்து போட்டியில் நமது கல்லூரி மாணவி S. ஐஸ்வர்யா, முதுநிலை இரண்டாம் ஆண்டு, வேதியல் துறை மாணவி கலந்து கொண்டார்.

18.02.2022 – 21.02.2022 ஆகிய தேதிகளில் சென்னை S R M பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான பூப்பந்து போட்டியில் நமது கல்லூரி மாணவிகள் 5 பேர் கலந்து கொண்டனர்.

21.2.2022 மற்றும் 30.2.2022 ஆகிய தேதிகளில் கேரளா சங்கணச்சேரி Assumption தன்னாட்சி கல்லூரியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் நமது கல்லூரி மாணவி S. சாந்தினி மூன்றாம் ஆண்டு, வணிகவரித்துறை கலந்து கொண்டார்