77 வது சுதந்திர தின விழா நிகழ்வுகள்

15 Aug 2023

திண்டுக்கல் எம். வி.  முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று 77-வது சுதந்திர தின விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் தே. லட்சுமி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நமது தேசிய பாதுகாப்பு படையில் ஈடுபட்டு தேசத்திற்காக தனது இன்னுயிரையும் நீத்த முன்னாள் ராணுவ வீரர் திரு. அழகு சோலைமலை அவர்களைப் பற்றி நினைவு கூர்ந்தார். மேலும் அவரது இத்தகைய தியாகச் செயலை கௌரவிக்கும் வகையில் அவர்களது குடும்பத்தினரருக்கு பொன்னாடை போற்றி இவ்விழாவில் கௌரவித்தார். இதனைத் தொடர்ந்து மாணவியர்களின் மும்மத வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், ஆசிரியர் அல்லா பணியாளர்கள், அலுவலக நண்பர்கள் மற்றும் மாணவியர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை மிகவும் சிறப்படையச் செய்தனர். ஜெய்ஹிந்த்