நுண்கலை மன்ற விழா 2023-2024
எம். வி. முத்தையா மகளிர் கலைக்கல்லூரி, திண்டுக்கல்.
நுண்கலை மன்ற விழா
2023-2024 -ஆம் கல்வியாண்டின் நுண்கலை மன்ற விழா கல்லூரி மூத்த பேராசிரியர் முனைவர். க. நாக நந்தினி, தமிழ்த் துறை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நுண்கலை மன்ற பொறுப்பாசிரியர் முனைவர். வெ. ராஜலெட்சுமி, பொருளியல் துறை அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி நுண்கலை மன்ற அறிக்கையை வாசித்தார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பல்சுவை அரசு கே. எம். ஜி. ஆதிப்பாண்டியன், கின்னஸ் சாதனையாளர், தலைவர் மக்கள் தொடர்பு கற்பகம் கல்வி நிறுவனங்கள், கோவை. அவர்கள், தான் கின்னஸ் சாதனை படைத்தன் பின்னணி பற்றி கூறினார் இன்றைய மாணாக்கர்கள் அலைபேசியிலும், இணையத்திலும் மூழ்கிக் கிடந்து எதை எதை இழக்கிறார்கள் என்பதனை நகைச்சுவை தழும்ப எடுத்துக் கூறினார். மாணாக்கர்கள் எப்பொழுதும் தன்னைச் சுற்றி நடப்பதை விழிப்புடன் கவனிக்க வேண்டும் மேலும் வீட்டில் பெரியோரை மதித்து அன்பான வார்த்தைகளால் பேசி அவர்களின் உணர்வை மதிக்க வேண்டும். பேச்சாற்றல் பெற்று தெளிவுற பேசி நாம் நினைத்த இலக்கை அடைய வேண்டும், சாதனைகள் பல புரிய வேண்டும், என மனதார வாழ்த்தி மாணவிகளை ஊக்கிவித்தார். நுண்கலை மன்ற போட்டிகள் நடத்தி ஏற்கனவே வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் மூலம் பரிசுகள் வழங்கப்பட்டது. நுண்கலை மன்ற மாணவர் செயலர். ஆர். பவித்ரா, பிபிஏ மூன்றாம் ஆண்டு மாணவி நன்றியுரை நிகழ்த்தினார். கலை நிகழ்ச்சிகளுடன் இவ்விழா இனிதே நிறைவடைந்தது.
` | |