ஆண்டு விழா மற்றும் கல்லூரி பேரவை நிறைவு விழா

21 Mar 2024

நம் கல்லூரியில் 21.03.2024 அன்று நடைபெற்ற கல்லூரி ஆண்டு விழாவின்போது நம் வரலாற்று துறை பேராசிரியர் முனைவர். ஜெ தனசேகரன் வரவேற்புரை வழங்கினார். நம் கல்லூரி முதல்வர் முனைவர். இல. ரேவதி அவர்கள் தலைமையுறை ஆற்றினார்கள் மேலும் வரலாற்று துறை தலைவர் மற்றும் பேரவை பொறுப்பாசிரியர் லா. பென்சிலா அவர்கள் 2023-2024 -ஆம் ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை வாசித்தார். நம் சிறப்பு விருந்தினர் முனைவர். ஜா. ஸ். ஏஞ்சலின் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். நம் சிறப்பு விருந்தினர் கதைகள் மூலமாக மாணவிகளுக்கு அறிவுரை கூறியதோடு  மட்டுமல்லாமல் அந்தக் கதையில் கேள்வி கேட்டு மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கினார்கள்.  நம் கல்லூரி முதல்வர் முனைவர். இல. ரேவதி அவர்கள் கல்லூரி பேரவை உறுப்பினர்களுக்கு அடையாள வில்லை அணிவித்து சிறப்பித்தார்கள், மேலும் சிறப்பு விருந்தினர் ஜா. ஸ். ஏஞ்சலின் அவர்கள் 2023-2024 -ஆம் கல்வியாண்டில் அகாடமி பிரைஸ் பெற்ற  மாணவர்களுக்கு அனைவருக்கும் பரிசு புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார்கள். இந்த விழாவின்போது மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன மேலும் வணிகவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி வி. ராகினி என்பவர் நன்றியுரை கூறினார். இன்று நடைபெற்ற கல்லூரி விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே முடிவுற்றது.