Field Visit / Industrial Visit

மாசாணி அம்மன் கோயில்

12.02.2016

ஆணை மலை குன்றின் அடிவாரத்தில் ஆழியாறு சங்கமிக்கும் இடத்தில் இக்கோயில் உள்ளது. இங்குள்ள மாசாணியம்மன் சிலை கிடந்த நிலையில் உள்ளது. இக்கோயிலில் உள்ள முக்கியமான சன்னதிகள் நீதிக்கல், மற்றும் மகாமுனியப்பன் போன்றவைகள் உள்ளன. காவல் தெய்வமாக கும்பமுனிஸ்வரர் உள்ளது. தெற்கே தலைவைத்துப்படுத்து இருக்கும் அம்மனுடைய திருக்கரங்களில் திரிசூலம், உடுக்கை, கபாலம், சர்ப்பம் ஆகியவை காணப்படுகின்றன. தலையில் ஜீவாலா மகுடத்துடன் மேலே நோக்கியபடி காணப்படுகிறார். இத்தகைய சிறப்புமிக்க அம்மனை தரிசிக்க தமிழ்த்துறையை சேர்ந்த இருசுழற்சி மாணவியர்களை கல்விச் சுற்றுலாவிற்காக அழைத்துச் சென்றோம். இக்கோயிலின் வழிபாட்டு முறைகள் பற்றியும், கோயில் சிறப்பு பற்றியும் மாணவிகளுக்கு தலைமைப் பட்டர் மூலமாக தெரிவிக்கப்பட்டது.

இராமநாதசுவாமி திருக்கோயில்

18.03.2019

இராமேஸ்வரம் கோயிலின் சிறப்பே 22 புனிததீர்த்தங்கள். இக்கோயிலின் அம்பாளின் பக்தரான ராயர் என்பவர் செய்த உப்புலிங்கம் இன்றும் கோயிலின் மூலவரான ராமநாதருக்கு பின்பு வைத்து வணங்கப்படுகிறது. ஒருவரின் எப்படிப்பட்ட பாவங்களும் இராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து நீராடி வழிபடுவதால் அது நீங்கும் என்பது ஒரு திடமான நம்பிக்கையாக உள்ளது.

இத்தகையை சிறப்பு வாய்ந்த கோயிலை தமிழ்த்துறை இரு சுழற்சி மாணவியர்களை கல்விச் சுற்றலாவிற்காக அழைத்துச் சென்றோம். தலைமைப் பட்டர் மூலமாக கோயில் சிறப்புகள் பற்றியும் , வழிபாட்டு முறைகள் பற்றியும் மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இராமநாதசுவாமி திருக்கோயில்

சரவணா நூற்பாலை

23.02.2018

தாடிக்கொம்பில் உள்ள நூற்பாலைக்கு எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ்த்துறையில்  பயிலும் இருசுழற்சி மாணவிகளையும் அழைத்துச்சென்றோம்.

பருத்தியிலிருந்தும் செயற்கை இழையில் இருந்தும் கிடைக்கும் பஞ்சை மூலப்பொருட்களாக கொண்டு அதை நூலாக உருவாக்கும் ஆலை நூற்பாலை எனப்படும்.

நூற்பாலை பகுதிகள்

பஞ்சடிக்கும் அறை பகுதி இழைநார், இணைப்பு பகுதி இழைநார், கீறல் பகுதி இரட்டை நெசவு பகுதி, நூற்றல் பகுதி, நூல் இரட்டிப்பு பகுதி, நூல் சுற்றும் பகுதி, சிற்பம் இடும் பகுதி போன்ற, பகுதிகள் உள்ளன.

நூற்பாலை மேற்பார்வையாளர் மூலம் நூற்பாலை குறித்த நுட்பமான தரவுகளை எளிமையான முறையில் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை இரு சுழற்சி மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

சரவணா நூற்பாலை

தாடிக்கொம்பு சௌந்திரராஜ பெருமாள் கோயில் 

14.02.2019

மதுரை அழகர் கோயிலுக்குண்டான நேர்த்திக் கடனை இங்கே செலுத்தலாம், இக்கோயிலில் கல்வி, தெய்வங்களான ஹயர்கீரிவர் சரஸ்வதி இருவரும் அடுத்தடுத்து காட்சியளிக்கின்றனர். திருவோணம் அன்று ஹயர்கீரிவருக்கு தேன் அபிஷேகத்துடன் விசேஷ பூஜை நடக்கிறது. படிப்பில் மந்தம், ஞாபகமறதி, பேச்சுக்குறைபாடு உள்ளவர்கள் இந்நாளில் ஹயர்கீரிவருக்கு தேங்காய், நாட்டுச் சர்க்கரை நெய் சேர்ந்த கலவையைப் படைத்து ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.

தன்வந்திரிக்கும் தனி சன்னதி உள்ளது. அமாவாசை தோறும் மூலிகை தைலாபிஷேலகம், மூலிகை லேகியம் படைத்து தன்வந்திரிக்கு பூஜை நடக்கிறது. இங்குள்ள சக்கரத்தாழ்வாரும் சிறப்பு மிகுந்தவர். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகள் உள்ளனர். இவருக்குப் பின்புறம் உள்ள நரசிம்மரை சுற்றிலும் அஷ்டலட்சுமிகள் உள்ளனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அரிது விஷ்வக்சேனர். இரட்டை விநாயகர் பெருமாளின் தசாவதாரம், லட்சுமி நரசிம்மா, ஆஞ்சநேயா, சொர்ண பைரவர் ஆகியோருக்கும் சன்னதி உண்டு.

சிற்பங்களின் சிறப்பு:-

“சிற்பக் கோயில்”, என்று சொல்லுமளவுக்கு கலைவண்ணங்கள் காணலாம் தாயார் கல்யாண சவுந்திரவல்லி தனிசன்னதியில் இருக்கிறார். இவரது சன்னதி முகப்பில் நின்ற நிலையில் விநாயகர், விஷ்ணு, துர்க்கை மற்றும் சங்கநிதி, பதுமநிதி உள்ளனர். கருடன் மீது அமர்ந்த பெருமாள் ராமரை தோளில் சுமந்த ஆஞ்சநேயா, சக்கரத்தாழ்வார், அகோரா வீரபத்திரர் ஆகிய சிறப்பங்கள் உள்ளன.

“மண்டுகம்” என்பது தவளை, ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறிவிட்டார். அதனால் அவர் மண்டுக மகரிஷி” எனப் பெயர் பெற்றார். தன் சாபநிவர்த்திக்காக இத்தலத்தில் மகாவிஷ்ணுவை வேண்டி அவரை தொந்தரவு செய்யவே அவனிடமிருந்து தன்னைக் தொந்தரவு செய்யவே அவனிடமிருந்து தன்னைக் காக்கும்படி மதுரையில் கள்ளழகரை வேண்டினார். அவருக்கு அருளிய சுவாமி அசுரணை அழித்தார். மேலும் அவரது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளியுள்ளார். “ சவுந்தரராஜர்” என்றும் திருநாமம் பெற்றார். இக்கோயில் அட்சுத தேவராயர் கட்டியதாக வரலாறு கூறுகிறது. இக்கோயில் வரலாறு மற்றும் வழிபாட்டுமுறை ஆகியவற்றை கோயில் தலைமைப் பட்டர் விளக்கினார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலை தமிழ்த்துறையில்  பயிலும் இருசுழற்சி மாணவிகளையும் அழைத்துச் சென்றோம்.

தாடிக்கொம்பு சௌந்திரராஜ பெருமாள் கோயில்