POs & PSOs
PROGRAMME OUTCOME
இளங்கலை தமிழ் இலக்கியம் - BA TAMIL LITERATURE
- இளங்கலைதமிழ் இலக்கியப் படிப்பு பயில் வோரை, தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை மிக்கவர்களாகப் பயிற்றுவித்து, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது
- இலக்கண இலக்கியங்களின் நுட்பங்களை அறிந்து, அவை சமூக வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் மாணவிகளை உருவாக்குவது.
- கவிதை, சிறுகதை போன்ற இலக்கிய வடிவங்களினூடே படைப்பளர்கள் வெளிப்படுத்திய சமூக விழுமியப் பதிவுகளை எடுத்தியம்பி, மேம்பாடுடைய சமூகத்தை அனைத்துத் தளத்திலும் ஏற்படுத்த மாணவிகளை வழிப்படுத்துவது.
- பிறதுறை மாணவர்களைப் போல வளாகத் தேர்வில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறச்செய்தல்
முதுகலை தமிழ் இலக்கியம் -MA.TAMIL LITERATURE
- தமிழ் இலக்கிய இலக்கணத்தின் பல்வேறு நிலையினையும் ஒட்டு மொத்த பரப்பினையும் அறிந்து கொள்ளச் செய்தல்
- ஆராய்ச்சி எண்ணங்களையும் திறனாய்வு மனப்பான்மையினையும் வளரச் செய்தல்.
- மாணவியரை, கருத்தரங்குகளில் பங்கேற்கச் செய்து, தரம் வாய்ந்த கட்டுகளை உருவாக்கத் தூண்டுதல்
- தமிழ்மொழியில் உயர்கல்வியைப் பெறச் செய்து மாணவிகளை அரசின் போட்டித் தேர்வுகளில் (TNPSC, UPSC, NET,SET) கலந்து கொள்ள ஊக்குவித்து தகுதியடையச் செய்தல்.
- மாணவிகளிடையே ஒழுக்கம், நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவைகளை வளர்த்து, உரிய வேலை வாய்ப்புகளைப் பெற வழிவகை செய்து உயர்வடையச் செய்தல்.
ஆய்வியல் நிறைஞர் M.Phil TAMIL LITERATURE
- தமிழ் மொழி இலக்கியம், இலக்கணம் படித்தோரை ஆய்வாளர்களாகப் புதிய பரிமாணம் பெற்று புதிய ஆராய்ச்சியை மேற்கொள்ளச் செய்தல்.
- சமூகம், பண்பாடு, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் நடப்பு வாழ்க்கையைப் புரிந்து கொண்டு, அதனைத் திறம்படக் கையாளும் திறன் உடையவராகச் செய்தல்.
PROGRAMME SPECIFIC OUTCOME
இளங்கலை தமிழ் இலக்கியம் - BA TAMIL LITERATURE
PSO1: | கவிதை, சிறுகதை இலக்கிய வடிவங்களினூடே படைப்பளர்கள் வெளிப்படுத்திய சமூக விழுமியப் பதிவுகளை எடுத்தியம்பி, மேம்பாடுடைய சமூகத்தை அனைத்துத் தளத்திலும் ஏற்படுத்த ஆற்றுப்படுத்தல் |
PSO2: | தமிழர்களின் வாழ்வில் சமயம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது மக்களிடையே அன்பையும் பண்பையும் தன்னம்பிக்கையையும் வளர்ப்பதில் சமயங்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும் சமயங்களின் கொள்கைகளைக் கூறுவன சமய இலக்கியங்களாகும் மாணவிகளுக்கு அக்கொள்கைகளை அறிமுகப்படுத்துவது இப்பாடத்தின் குறிக்கோளாகும். |
PSO3: | பண்டைய இலக்கியப் பதிவுகளில் உள்ள பழந்தமிழரின் ஆளுமைகளையும் அடையாளங்களையும் புலப்படுத்துதல் பக்தி இலக்கியத்தின் வழியாக உள்ளத்தையும் பண்படுத்துதல். |
PSO4: | அறிவியல் தமிழாக்கத்தின் அவசியத்தையும் அதனால் சமகால சமூக அமைப்பின் அனைத்துத் தரப்பு மக்களும் நுகளும் பயன்பாட்டையும் எடுத்தியம்புதல். |
PSO5: | இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கு இலக்கியச் சிந்தனையை வளர்க்கும் நோக்கில் இப்பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது காப்பியம் புராணம் இலக்கணம் மற்றும் புதினம் எழுதுவதற்கு மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இப்பாடத்திட்டம் உள்ளது. |
PSO6: | இலக்கிய வகைகளிலும் சங்க இலக்கியத்திலும் இருக்கும் கற்பனை நயத்தையும் இலக்கியத்தையும் இலக்கணத்தையும் பரவலாக மாணவர்கள் அறியும் படி செய்வது. |
PSO7: | தமிழ் நாட்டின் ஆட்சிமொழியான தமிழை அனைத்துத் துறையிலும், நிருவாகத்திலும் முழுமையாகப் பயன்படுத்தச் செய்வது. |
PSO8: | தமிழ் அற இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள அறக்கருத்துகளைத் தெரிந்து கொண்டு அக்கருத்துகளை வாழ்வின் உயர்வுக்குப் பயன்படுத்த வழிவகுத்தல். |
PSO9: | எழுத்து சொல், பொருள் யாப்பு அணி போன்ற தமிழின் மரபிலக்கணங்களை அறிந்து கொள்ளச் செய்தல். |
PSO10: | தமிழ் நாட்டின் தொன்மையான தென்னிந்தியத் கோவில் வகைகள், சிற்பம் போன்றவற்றின் சிறப்பியல்புகளை, சுற்றுலாச் செல்வதன் மூலம் உணரச் Q செய்தல். |
முதுகலை தமிழ் இலக்கியம் -MA.TAMIL LITERATURE
PSO1: | பழந்தமிழ் இலக்கியங்களின் திணை, துறைக்கோட்பாடுகளின் வழி, திணைசார் சமுதாய வாழ்வின் பல்வேறுபட்ட பரிமாணங்களை புலவர்கள் வாயிலாகவும் திணை இலக்கியத்தின் வாயிலாகவும் அறிதல். |
PSO2: | தமிழ்காப்பிய மரவு, காப்பியக்கட்டமைப்பு, பாடுபொருள்களைத் தெளிவுபடுத்தி சமயங்களின் பங்களிப்பை உணரச் செய்தல். |
PSO3: | அற இலக்கியங்கள் தோன்றுவதற்கான காரணங்களை உணர்ந்து, காலமாற்றங்களால் விளைந்த அற மாற்றங்களை உணரச் செய்தல். |
PSO4: | இலக்கணக் கல்வியின் தேவையை உணர்ந்து, காலந்தோறும் தமிழ் மொழி பெற்ற மாற்றத்தை இலக்கணகல்வியின் வழி உணரச் செய்தல். |
PSO5: | மாணவர்களை படைப்புத் திறனில் ஆர்வம் கொள்ள வழிவகை செய்து, இளம் படைப்பாளிகளை அடையாளப் படுத்துதல். |
ஆய்வியல் நிறைஞர் M.Phil TAMIL LITERATURE
PSO1: | பழந்தமிழ் இலக்கியம் முதற் கொண்டு இக்கால இலக்கியங்கள் வரை உள்ளவற்றை, ஆய்வியல் நோக்கில் அணுகுவதற்கான வழிமுறைகளை உணரச் செய்தல். |
PSO2: | பண்டைத் தமிழரின் அக, புற வாழ்வியலை மாணவிகள் நுட்பமாக அறியச் செய்தல். |
PSO3: | திறனாய்வு அனுகுமுறைகளை விளக்கி திறனாய்வின் வளர்ச்சியையும் செல்நெறியையும் எடுத்துக் கூறுதல். |
PSO4: | ஆய்வுப் பொருளைத் தேர்வு செய்தல், அதற்கான தரவுகளைத் திரட்டுதல், வகைப்படுத்துதல் ஆகியவற்றை ஆய்வு நெறியோடு வெளிப்படுத்தும் முறையினை அறியச் செய்தல். |