தமிழ் மொழி வளர்ச்சியில் இணையத்தின் பங்கு
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழியற்புலம், சுருளுயு நிதி நல்கையுடன் 04.04.2022 முதல் 07.04.2022 வரை ‘தமிழ் மொழி வளர்ச்சியில் இணையத்தின் பங்கு’ எனும் பொருண்மையில் பயிலரங்கினை நடத்தியது.
மேற்காண் பயிலரங்கில் முதலாம் ஆண்டு முதுகலை மாணவியர் 16 பேரும், இரு பேராசிரியர்களும் பங்கேற்றுப் பயன்பெற்றனர். முதலாம் ஆண்டு முதுகலை மாணவியருக்கு இவ்வாண்டு முதல் “ மேம்பட்ட கணினித்தமிழ், தமிழ்த்தரவக உருவாக்கம்” எனும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பாடத்திட்டத்தையொட்டி இயற்கை மொழி ஆய்வு, இயந்திர மொழி பெயர்ப்பு, தமிழ் தரவக உருவாக்கம் உள்ளிட்ட தலைப்புகளிலும், ஆய்வு வளமையர் பயிலரங்கில் பயிற்சியளித்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் வலைப்பூ உருவாக்கம், வலையொளி உருவாக்கம், கட்;டற்ற மென்பொருள் எனப் பல தலைப்புகளில் நான்கு நாட்களும் மாணவியர் பயிற்சி பெற்றனர்.
பயிலரங்கு மிக்க பயன் நல்கியதுடன், மாணவியருக்கு வேலை வாய்ப்பு தரும் வகையிலும் அமைந்திருந்தது.




