CS Association Function Inauguration 2023-2024

27 Sep 2023

கணினி அறிவியல் துறை மன்ற கூட்டம்

எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி, கணினி அறிவியல் துறை, மன்ற கூட்டம் 27/9/2023 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கணினி அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் முனைவர். ஐ. ராஜேஸ்வரி அவர்கள் வரவேற்புரை நல்கி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து கல்லூரி  முதல்வர் முனைவர். டாக்டர். தே. லட்சுமி அவர்கள்  கணிப்பொறியில் எவ்வாறு செயற்கை நுண் அறிவுத்திறன் பயன்படுத்தப்படுகிறது அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றி தனது தலைமை உரையில் எடுத்துரைத்தார்.  இம்மன்ற கூட்டத்திற்கு கரூர், ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர், முனைவர். டாக்டர் N. நாகதீபா அவர்கள் சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டு தனது சிறப்புரையில் கணினி அறிவியல் துறை மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு அதனுடைய பயன்பாடுகள் மற்றும் அதனை கற்றுக் கொள்வதினால் வாழ்வில் ஏற்படும் முன்னேற்றங்கள், மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன்களை வளர்த்துக் கொள்வதினால் ஏற்படும் வேலை வாய்ப்புகளையும் அதன் மூலம் தங்களின் வாழ்வின் வாழ்வாதாரங்களை எவ்வாறு சீர்படுத்த  முடியும் என்பதனையும் பற்றி மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார்.  சிறப்பு உரையை தொடர்ந்து மாணவியர்கள் அவர்களுக்குள் ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டு தெளிவு அடைந்தனர். இறுதியாக கணினி அறிவியல் துறை முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி நன்றி உரை நல்கினார். இந்த மன்ற கூட்டத்தில் கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். விழா இனிதே நிறைவுற்றது.