கல்லூரி விளையாட்டு விழா 2023-2024

19 Mar 2024

கல்லூரி விளையாட்டு விழா

2023-2024 -ஆம் கல்வியாண்டின் கல்லூரி விளையாட்டு விழா 19.03.2024 அன்று காலை 9.00 மணி அளவில் தொடங்கப்பட்டது.

தமிழ்த்தாயினை வணங்கி இனிதே தொடங்கிய விளையாட்டு விழா மாணவிகளின் அணிவகுப்பு நடைக்கு மரியாதை செய்து தேசிய கொடியை நமது சிறப்பு விருந்தினர் திருமதி. பி. வசந்தா காவல் ஆய்வாளர் தாடிக்கொம்பு காவல் நிலையம் அவர்களும் ஒலிம்பிக் கொடியினையும் திரு. பாக்கியசாமி சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களும் மற்றும் நமது கல்லூரி கொடியினை பொறுப்பு முதல்வர். முனைவர். க, நாகநந்தினி அவர்களால் ஏற்றப்பட்டு ஒலிம்பிக் விளக்கினை ஏற்றி விழா தொடங்கப்பட்டது.

விளையாட்டு விழாவில் மாணவிகளின் வரவேற்பு நடனம், சிலம்பாட்டம், பறையாட்டம், பிரமிடு மற்றும் மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. முனைவர் இரா. வகிதா இணை பேராசிரியர் விளையாட்டு துறை பொறுப்பாசிரியர் வரவேற்புரை ஆற்றினார். நமது பொறுப்பு முதல்வர் தலைமை உரையாற்றினார் நமது சிறப்பு விருந்தினர்கள் திருமதி. பி. வசந்தா மற்றும் திரு. பாக்கியசாமி ஆகியோர் மாணவிகளுக்கு பல நல்ல கருத்துக்களை கூறி சிறப்பு உரையாற்றினார்கள்.  நமது சிறப்பு விருந்தினர் திரு. எஸ். சௌந்தர்ராஜன் ஓய்வு பெற்ற மாவட்ட விளையாட்டு அதிகாரி அவர்கள் மாணவர்களுக்கு விளையாட்டு துறையின் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பு மற்றும் உதவித்தொகை ஆகியவற்றை பற்றி விளக்கினார்கள். ஆண்டறிக்கையை விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் வாசித்தார்.

பொறுப்பு முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் மூலமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விளையாட்டுத்துறை செயலர். செல்வி. அ. பிரபா வேதியள் துறை மூன்றாம் ஆண்டு மாணவி நன்றி உரை கூற நாட்டுப் பன்னுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.