தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது

07 Dec 2024

திண்டுக்கல், M.V.M. அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு  பணி நியமன ஆணையை வழங்கினார்.

இந்த தனியார் துறைவேலைவாய்ப்பு முகாமில் திட்ட இயக்குநர் திலகவதி, (வேலைவாய்ப்பு) மண்டல இணை இயக்குநர் ஜோதிமணி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு துறை உதவி இயக்குநர் பிரபாவதி, மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார திட்ட இயக்குனர் சதீஷ் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.